வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
அரியலூர் மாவட்டம் அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ராங்கியம் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புசுவர் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பெரியகருக்கை கிராமத்தில் 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், நாகம்பந்தல் கிராமத்தில் வடிகால் வாய்கால் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் ஆண்டிமடம் சந்தைதோப்பு மற்றும் சிலம்பூர் கிராமத்தில் தலா 5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்கால் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். இதில் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story