உட்கோட்டையில் அபராத ரட்சகர் கோவிலை எம்எல்ஏ கோரிக்கை
அமைச்சரிடம் கோரிக்கை
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பேசினார்.
அப்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உட்கோட்டை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அபராத ரட்சகர் கோவிலை தொன்மையும், பழமையும் மாறாமல் புனரமைத்து குடமுழுக்கு செய்வதற்கு கோரிக்கை விடுத்து பேசினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் உள்ள மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமாக உள்ள பழமை வாய்ந்த 517 கோவில்களுக்கும் தமிழக முதல்வர் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் எம்.எல்.ஏ. கூறிய அபராத ரட்சகர் கோவிலும் அடங்கும். விரைவில் அந்த கோவில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். அவருக்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
இதேபோல் ஜெயங்கொண்டத்திற்கு சந்தை மேம்பாடு செய்யும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.