கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட எம்எல்ஏ கோரிக்கை.
திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் கிளிக்கூடு இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள இடையாற்றுமங்கலம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிளிக்கூடு இடையே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டி தர சட்டமன்ற கூட்டத்தொடரில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டுவதற்கான திட்டம் அரசு பரிசீலினையில் உள்ளது. சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முதல்வரின் கவனத்திற்க்கு எடுத்துச் சென்று இந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முயற்சி செய்யும் என பதிலளித்தார்.
Next Story