புயல் வெள்ளத்தை சமாளிக்க முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

புயல் வெள்ளத்தை சமாளிக்க முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

ஈஸ்வரன் எம் எல் ஏ

வரலாறு காணாத புயல் வெள்ளத்தை சமாளிக்க முதல்வருக்கு எம் எல் ஏ ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

வரலாறு காணாத புயலால் சென்னை மாநகரம் மட்டுமல்ல, பக்கத்தில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொலைக்காட்சிகளில் இதனை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. யாரும் எதிர்பாராமல், கடலும் கொந்தளிப்பாக இருந்த காரணத்தினால், மாநகரத்துக்குள்ளே பெய்கின்ற மழைநீர் கடலுக்குள்ளே செல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை சென்னை மாநகரம் சந்தித்திருக்கிறது. இங்கு பெரும்பாலும் ஐடி துறையில் வேலை பார்க்கின்ற மக்கள், அதிகமான பொறியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, விஜயநகரம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளிலே அவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட மக்கள் நிரந்தரமாக காப்பாற்றப்பட ஒரே தீர்வு தான் உள்ளது. குறிப்பாக சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது திருவள்ளூர் காஞ்சிபுரம்,செங்கல் பட்டு மாவட்டங்களில் பெய்கின்ற மழை நீர் சென்னைக்கு உள்ளே வருவது தான் காரணம். அடையாறு ஆற்றின் வழியாக சென்னையின் மையப் பகுதிக்கு அதிக நீர் வருகிறது.

அதுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதியில் பெய்கின்ற மழையின் மூலமாக பெருக்கெடுத்து வருகின்ற வெள்ளத்தை செம்பரம்பாக்கத்திற்கு முன்னதாக அதை திசை மாற்றி பாலாற்றிலே கொண்டு போய் கலந்து விடுவோம் என்று சொன்னால் பல்வேறு நலன்களும் ஏற்படும். சென்னையும் வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும். செம்பரம்பாக்கம் ஏரிமுதல் பாலாறு என்பது சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

சென்னை மாநகரத்திற்குள் எத்தனையோ வாய்க்கால்களை ஆக்கிரமித்து விட்டோம். எத்தனையோ ஏரிகளை ஆக்கிரமித்து விட்டோம். எல்லோரும் சமூக வலைதளங்களில் கேள்வி தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆக்கிரமித்தால் என்ன ஆகும் என்று ஒவ்வொரு மழையிலும், ஒவ்வொரு புயலிலும் இது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன செம்பரம்பாக்கத்தில் இருந்து அந்த தண்ணீர் பாலாற்றுக்கு திசை மாற்ற வேண்டும். எத்தனை வாய்க்காலை அழித்தோமோ, அதற்கு சமமான அளவு ஒரு செயற்கை ஆற்றை உருவாக்கி, அதில் உபரி மழை நீரை செல்ல செய்து விட்டால் அனைத்தும் மாறும். இதற்கு சென்னையில் செலவாகிற பணத்தில் பாதி பணம் கூட செலவாகாது. நிரந்தர தீர்வாக கருதி ஆரம்பித்து இதை முனைப்போடு செயல்படுத்தி அடுத்த புயலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்

Tags

Next Story