குடிநீர் சோதனை அறிக்கை வெளிப்படை தன்மையோடு வெளியிட எம்எல்ஏ கோரிக்கை

குடிநீர் சோதனை அறிக்கை வெளிப்படை தன்மையோடு வெளியிட எம்எல்ஏ கோரிக்கை

எம்எல்ஏ கோரிக்கை

குடிநீர் சோதனை அறிக்கை வெளிப்படை தன்மையோடு வெளியிட வேண்டும் என சக்கரபாணி எம்.எல்.ஏ. கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா, கஞ்சனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் குடிநீர் கிணற்றில் மனித கழிவு கலந்ததாக பொதுமக்களால் புகார் கூறப்பட்டதை அடுத்து அந்த கிணற்றை வானூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சக்கரபாணி நேரில் பார்வையிட்டு அங்கிருந்த டேங்க் ஆபரேட்டர் மற்றும் பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கே.ஆர்.பாளையம், குடிநீர் கிணற்றில் மனித கழிவு கலக்கப்படவில்லை, அது தேன் அடை என மாவட்ட நிர்வாகமும், தி.மு.க. அரசும் கூறி மக்களை திசை திருப்பி விட்டுள்ளது.

குடிநீர் சோதனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை வெளிப் படை தன்மையோடு வெளியிட வேண்டுகிறேன். வேங்கை வயலை தொடர்ந்து பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு இது வரை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story