விவசாயிகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வரும் எம்எல்ஏக்கள்
விவசாயிகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வரும் எம்எல்ஏக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் குறைதீர்கூட்டத்திற்கு வரும் விவசாயிகளுக்கு திமுக, அதிமுக,காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போட்டி போட்டு உணவு வழங்கி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் வெகுதூரத்திலிருந்து வந்து செல்வதால் வீட்டிற்கு செல்வதற்கு மாலை 4 மணிக்கு மேல் ஆகிறது. இதனையறிந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்(அதிமுக), விவசாயிகள் பசியுடன் செல்லக்கூடாது என எண்ணி தனது சொந்த செலவில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கினார். இதனையறிந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி(திமுக) போட்டிக்காக கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அவரும் அனைவருக்கும் உணவுகளை வழங்கினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி(காங்கிரஸ்) பங்கேற்று அனைவருக்கும் உணவுகளை வழங்கினார். உணவு வழங்குவதில் எம்எல்ஏக்கள் போட்டி போடுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story