மனிதநேய மக்கள் கட்சியில் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர கிளை சார்பாக நகர ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையை சார்ந்த பல்வேறு இளைஞர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு தங்களை கட்சியில் மமக மாநில துணை பொது செயலாளர் மைதின் சேட்கான் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு கிளைத் தலைவர் உமர்கத்தாப் அவர்கள் தலைமை தாங்கினார்கள் தமுமுக நகர செயலாளர் முபாரக் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகப்பிலாசா, நகர பொருளாளர் மற்றும் நகரத் துணைத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் மைதீன்சேட்கான், மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் சிசலீம், ExMC தமுமுக மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் கோகோஅலி, சமூக நீதி மாணவர் இயக்கத்தினுடைய மாவட்ட செயலாளர் மஜீத்ஷா, மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் தமுமுக முன்னாள் மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், மெடிக்கல் மீரான் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.