MMMK சார்பில் ரயில் மறியல் தடுத்து போலீசார் நிறுத்தியதால் பரபரப்பு
தூத்துக்குடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் கண்டன ஆர்ப்பாட்டம்; மசோதாவிற்கு ஆதரவளித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை புகைப்படத்தை கிழித்தெறிந்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாநில துணைத்தலைவர் செய்யது அலி தலைமையில் மாவட்ட செயலாளர் முகமது ஜான் உள்ளிட்ட மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினரை தடுத்து நிறுத்தினர் இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இஸ்லாமியர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென்று இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் புகைப்படத்தை இஸ்லாமிய பெண்கள் கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Next Story





