டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்
தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 பணிகளுக்கான தேர்வு இந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு 2024 ஜூன் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக 25 தேர்வுகளை கொண்ட தொகுதி 4 தேர்வுக்கான கட்டணமில்லா தேர்வு தொடர் 11 ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. இத்தேர்வு தொடரானது டிஎன்பிஎஸ்சியில் நடத்தப்படும் தேர்வு போன்று நடக்கிறது. இத்தேர்வு ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடக்க உள்ளது.
விருப்பமுள்ள தேர்வர்கள் https://surveyheart. com/form/6584890ea 4b5a73d24d580f5 என்ற Google Form Linkல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வரும் 9ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்தல் அவசியம்.
தொகுதி 4 தேர்விற்கான தேர்வு தொடர் தொடர்பான விபரங்களை 04362237037 என்றதொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இத்தேர்வு தொடரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.