கடையநல்லூரில் இரவில் மிதமான மழை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரவில் மிதமான மழை பெய்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரவில் மிதமான மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு நேரங்களில் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது . தொடர்ந்து மிதமான மழை இரவு 8 மணிக்கு மேல் பெய்ய தொடங்கியது. இதனால் வர்த்தக நிறுவனங்களில் இரவு நேர விற்பனை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசுகிறது. அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story