காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை

மழை பொழிவு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும், வடபகுதி மாவட்டங்களான காஞ்சிபுரம், சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மண்டலம் அறிவித்திருந்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே இதமான காற்றுடன் லேசான சாரல் மழை காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் பகுதிகளில் தொடங்கி அவ்வப்போது பெய்து வந்தது. மாலை 4 மணி முதல் உத்திரமேரூர் பகுதியில் லேசான மழையும் காஞ்சிபுரம் பகுதிகளில் சாரலும் மழையும் பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல் ஓய்ந்து தற்போது பொதுமக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த திடீர் மழை பொது மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நான்கு மணிக்கு இருள் சூழ்ந்து சாலைகளில் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு உடனும் திடீர் மழையை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் பாதுகாப்பாக சென்றனர்.

தொடர்ந்து வரும் 17ஆம் தேதி வரை இதுபோன்ற நிலை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதும், நீர் வழிந்த பகுதிகளில் மீண்டும் கன மழை தாக்கம் ஏற்பட்டு மீண்டும் பொருட்கள் சேதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story