கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கொடைக்கானல்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை
மழை 
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது,இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் மாலை வேளையில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது, இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

குறிப்பாக அப்சர்வேட்டரி, அண்ணாசாலை,ஏரி சாலை, உகார்தேநகர், பாம்பார்புரம், செண்பகனூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகின்றது, மழை தொடர்வதால் முக்கிய குடிநீர் தேக்கங்கள் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சுழலும் நிலவி வருகின்றது.

Tags

Next Story