கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை.
தென் தமிழக பகுதிகளின் மேல்பகுதியில் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது,
அதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை மிதமான பெய்த்து, குறிப்பாக அப்சர்வேட்டரி, பேருந்து நிலையம், ஏரி சாலை, அண்ணா சாலை, அண்ணாநகர், ஆனந்தகிரி, கல்லுக்குழி மூஞ்சிக்கல், கல்லறை மேடு, உகார்த்தே நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும் ஒரு சில பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது, மழை தொடர்வதால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.