உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை:விவசாயிகள் மகிழ்ச்சி

உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை:விவசாயிகள் மகிழ்ச்சி

மிதமான மழை 

உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை. விவசாயிகள் மகிழ்ச்சி. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை - வெப்பம் தணிந்து மிதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றம் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 111- டிகிரி வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை நிலவி வந்த கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆலங்கட்டி மழை பெய்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இன்று கரூர் மாவட்டம், ஜெகதாபி மற்றும் உப்பிடமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த பகுதியானது காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வதில் முதன்மையான பகுதியாக இருப்பதால், தற்போது பெய்த மழையின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாய பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story