கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை!

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை!

  கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர்,நவஇந்தியா,புலியகுளம், இடையார்பாளையம், கவுண்டம்பாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.கடந்த சில தினங்களாக கோவையில் மழை பெய்த நிலையில் நேற்றைய தினம் மழை பெய்யவில்லை.இந்நிலையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

Tags

Next Story