ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு
X

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர் 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல சிகிச்சை இருவார சிறப்பு முகாம் கடந்த 21 ஆம் தேதியிலிருந்து வரும் டிசம்பர் 4 தேதி வரை நடைபெறுகிறது . அதனையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், வேலூர் மாவட்டத்தில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் குடும்ப பொருளாதார மேம்படுத்தவும் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தீவிர படுத்த வேண்டும், கடந்த ஆண்டு ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முறையில் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வாகனம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை தொடர்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.மேலும் நவீன கருத்தடை செய்யும் ஆண்களுக்கு அரசின் ஊக்கத்தகையான ரூபாய் 1100 மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக வழங்கப்படும் நிதியினையும் சேர்த்து மொத்தமாக 5100 ரூபாய் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story