காஞ்சியில் கைத்தறி சங்கங்கள் நவீனமயம்: அமைச்சர் தகவல்

காஞ்சியில் கைத்தறி சங்கங்கள் நவீனமயம்: அமைச்சர் தகவல்

கைத்தறி அமைச்சர்

கைத்தறி சங்கங்கள் நவீனமான பின், விற்பனை இலக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்

கைத்தறி சங்கங்கள் நவீனமான பின், விற்பனை இலக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த, ஓரிக்கையில், தமிழ்நாடு சரிகை ஆலை வளாகத்தில், சிறிய அளவிலான கைத்தறி பூங்கா மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு வளாகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.

உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி.,செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறு, குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர்அன்பரசன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

பல்வேறு கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கைத்தறிப் பொருட்கள் கண்காட்சி, 52 நெசவாளர்களுக்கு 62.75 லட்சம் ரூபாய் முத்ரா தொழிற்கடன், 15 நெசவாளர்களுக்கு மருத்துவ தொகுப்புகளையும் வழங்கினர். தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி கூறியதாவது: தமிழகத்தில் கைத்தறி தொழிலை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினரை கைத்தறி நெசவுத் தொழிலை செய்ய ஊக்குவிக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். பட்ஜெட்டில், 10 இடங்களில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். காஞ்சிபுரத்தில் முதல் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா துவக்கப்பட்டுள்ளது. ஓரிக்கை தமிழ்நாடு சரிகை ஆலை வளாகத்தில், முதற்கட்டமாக, 50 கைத்தறிகள் மற்றும் இரண்டாவது கட்டமாக, 50 கைத்தறிகள் அமைய உள்ளன."

Tags

Next Story