1991-ல் விவேகானந்தர் மண்டபத்தில் மோடி ; வைரலாகும் போட்டோ

1991-ல் விவேகானந்தர் மண்டபத்தில் மோடி ; வைரலாகும் போட்டோ

பிரதமர் மோடி 33 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வந்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


பிரதமர் மோடி 33 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வந்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 30-ம் தேதி முதல் 3 நாட்கள் (இன்று 1-ம் தேதி வரை ) தங்கியிருந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி 33 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரி வந்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோவானது டிசம்பர் 11, 1991-ல் எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தொடங்கி காஷ்மீரில் முடிவடைந்த பாரதிய ஜனதா கட்சியின் ஏக்தா யாத்திரையின் போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஏக்தா யாத்திரைக்கு மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமை தாங்கினார். அப்போது பாஜக தொண்டராக இருந்த நரேந்திர மோடி அணிவகுப்பை ஏற்பாடு செய்வதில் முக்கிய பணியாற்றினார்.

Tags

Next Story