மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை - முத்தரசன்

மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை - முத்தரசன்

 மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொதுக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை புரிந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, 100 நாள் வேலைவாய்ப்பு ஊதியம் 400, பிளஸ் 2 வரை கட்டாய கல்வி, நீட் நுழைவுத் தேர்வு அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் ரத்து செய்து கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு தேர்தல் அறிக்கைகள் வரவேற்க கூடியது. இதேபோல் திமுக சார்பிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தில் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மோடி எதுவுமே செய்யவில்லை. 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. இது பின்னடைவு. சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் முடிவு செய்யும் என்று கூறியவர்கள், இன்று தேர்தலை கருத்தில் கொண்டு விலையை குறைத்துக் கொண்டு வருகின்றனர். தேர்தலையொட்டி சில அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

பா.ஜ., ஜனநாயக விரோதமான, பாசிச சர்வாதிகார அரசை நடத்துகிறது. இ.டி., ஐ.டி., தேர்தல் ஆணையம் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஒரு நெருக்கடியை உருவாக்கி மோடியின் உத்தரவை நிறைவேற்றும் அமைப்புகளாக மாறி உள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பேராபத்து. அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. சி.ஏ.ஏ. முஸ்லிம்களுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழக மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெள்ள பாதிப்புக்கு வரவில்லை. ஒத்த பைசா கூட தரவில்லை. மாநில அரசு நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடவேண்டி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடித்தான் பலன் அடைய வேண்டியுள்ளது. மோடி 7 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

அதேபோல் அமித்ஷா வருவதாக கூறி பயணத்தை ரத்து செய்துள்ளார். தமிழகத்திற்கு சென்று எந்த பயனும் இல்லை என்று அமித்ஷா பயணத்தை ரத்து செய்துள்ளார். மோடியும் அதே முடிவெடுத்தால் அவருக்கு நல்லது. அலைச்சல் குறையும், பயண நேரங்கள் குறையும் தேவையில்லாம வந்து அலைகிறார். எத்தனை முறை வந்து அலைந்தாலும் பயனில்லை. தமிழகத்தின் மீது பாசம் உள்ளது போல் நடிக்கிறார்.

மோடி அடுத்தமுறை பிரச்சாரத்திற்கு வரும் போது, சமஸ்கிருதம், ஹிந்திக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள், அதே போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தேர்தல் பறக்கும் படையினர் செய்கின்றனர். அவர்களுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்களை மிரட்ட கூடாது என பேசினார்

Tags

Next Story