தமிழகத்தில் மோடி பருப்பு வேகாது - முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

தமிழகத்தில் மோடி பருப்பு வேகாது - முன்னாள் அமைச்சர்  வைகை செல்வன்

வைகை செல்வன் பிரச்சாரம்  

மிக்ஸி கிரைண்டர்,பேனுக்கு தான் கேரண்டி கொடுப்பார்கள்.அதுபோல் மோடி கேரண்டி என குறிப்பிடுகிறார் நான் ஹிந்தியில் அவருக்கு பதில் அளிக்கிறேன் மோடி அவர்களே தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது என வைகை செல்வன் ஹிந்தியில் விமர்சனம் செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் குமரகுருவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய வைகை செல்வன் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வாய் திறப்பதே இல்லை அவர்கள் கேண்டினில் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்கிறார்கள் இவர்கள் நமக்கு தேவையா?ஆனால் காவேரி விவகாரத்தில் ரெண்டரை மாத காலம் நாடாளுமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் முடக்கினர்.

குமரகுருவிற்கு வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் பாரத பிரதமரை கேள்வி கேட்பார் என்றும் பேசினார். தமிழகத்திற்கு பலமுறை வரும் பிரதமர் மோடி என்னென்னமோ பேசுகிறார் ஹிந்தியில் மோடி உத்திரவாதம் என குறிப்பிடுகிறார். மிக்ஸி கிரைண்டர் ஃபேனுக்கு தான் கேரண்டி கொடுப்பார்கள்.அதுபோல் மோடி கேரண்டி என குறிப்பிடுகிறார் நான் ஹிந்தியில் அவருக்கு பதில் அளிக்கிறேன் மோடி அவர்களே தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது என ஹிந்தியில் பேசினார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவிற்கு பினாமியை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அமைச்சர் ஏ.வ.வேலுவிற்க்கு பினாமி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் MLA என்பதற்கு பதிலாக உதயம் கார்த்திகேயன் என பேசினார். மேலும் வசந்தம் கார்த்திகேயனுக்கு பினாமி மலையரசன். மலையரசன் என பெயர் வைத்தால் மலைக்கு தான் போக வேண்டும் நாடாளுமன்றத்திற்கு போக முடியாது என கூறி அதிமுகவுக்கு வாளிக்க அளிக்க வேண்டும் என்று வாக்கு சேகரித்தார்

Tags

Next Story