100 நாள் வேலை திட்டத்தை மூட மோடி அரசு திட்டம்- பிரச்சாரத்தில் ஜோதிமணி பேச்சு

100 நாள் வேலை திட்டத்தை மூட மோடி அரசு திட்டம்-பிரச்சாரத்தில் ஜோதிமணி பேச்சு.
100 நாள் வேலை திட்டத்தை மூட மோடி அரசு திட்டம்- பிரச்சாரத்தில் ஜோதிமணி பேச்சு. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நேற்று இரவு க. பரமத்தி மேற்கு, வடக்கு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினர். அப்போது, தென்னிலை பேருந்து நிறுத்தம் அருகே கூடியிருந்த பொது மக்களிடையே ஜோதிமணி வாக்கு சேகரிப்பதற்காக பேசினார். அப்போது, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கமே கிராமப் பகுதிகளில் வறுமை ஒழிப்புக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை தருவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்குவார்கள். தற்போது இந்தத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உரிய காலகட்டத்தில் ஊதியம் வழங்கப்படுவது இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்கிய போது, அவர்கள் கிராம பகுதியில் உள்ள சந்தையில் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்கள். ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பாக இருந்த இந்த திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக குற்றம் சாட்டினார் ஜோதிமணி.

Tags

Next Story