சமூக நீதிக்கு உன்மையான ஹீரோ மோடி: எல். முருகன்

சமூக நீதிக்கு உன்மையான ஹீரோ மோடி: எல். முருகன்

கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக வேட்பாளர்

சமூக நீதியை பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது, ஊட்டியில் பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. பா.ஜ.க., தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் கூறியதாவது: பா.ஜ.க., இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அசுர வளர்ச்சியோடு மிகப் பிரதான கட்சியாக வளர்ந்து வருகிறது. எங்களுடைய பிரதமர் நரேந்திர மோடி இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் மேல் அளவுக்கதிக பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அது தேர்தல் முடிவு வரும் போது தெரியும். சமூக நீதிக்கு உன்மையான ஹீரோ மோடி ஜி அவர்கள் தான், தமிழகத்தில் இருக்கிற ஸ்டாலின் போலி சமூக நீதி, போலி திராவிட மாடல் கருத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. சமூக நீதி, திராவிட மாடல் என்று போலியாக ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க., வில் 3 பட்டியல் இன அமைச்சர்கள் நெறிமுறைகளின் படி (protocol) கடைசி மூன்று இடத்தில் இருக்கிறார்கள், ஆனால் பா.ஜ.க., வில் முதல்வராகவும், துணை முதல்வராகவும் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதியையும் தி.மு.க., நிறை வேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார், நீலகிரியில் இந்த தேர்தல் 2 ஜியா, மோடிஜியா என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story