100 நாள் வேலை திட்டத்தை அழித்து வருகிறார் மோடி - மாணிக்கம் தாகூர்

100 நாள் வேலை திட்டத்தை அழித்து வருகிறார் மோடி - மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் எம்பி பிரசாரம்  

விஷம் கொடுப்பது போல் 100 நாள் வேலை திட்டத்தை பிரதமர் மோடி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார் என பிரசாரத்தின் போது மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம்சாட்டினார்.

விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளராக இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நான்காவது முறையாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். முதற்கட்டமாக திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உச்சபட்டி, கப்பலூர், உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் திமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் என அனைவரும் உடனிருந்து வாக்கு சேகரித்தனர்.

தொடர்ந்து., பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கூறுகையில்.வரும் 19 ஆம் தேதி பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் மோடி பிரதமர் ஆகும்பொழுது 450 ரூபாய் ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை இப்போது எவ்வளவு உயர்த்தி இருக்கிறார் என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதற்கு ஆயிரம் ரூபாய் என்று கூறினர். நான் கூட 2000 ரூபாய் உயர்த்திட்டாரோ என்று நினைத்தேன்.

450 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலையை 1000 ரூபாய்யாக உயர்த்திய புண்ணியவான் மோடி. மோடி கேஸ் சிலிண்டரை 2000 ரூபாயாக ஆக்க வேண்டுமா..? அல்லது அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா..? என்பது உங்கள் கையில் மோடியை வீட்டுக்கு அனுப்பினால் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக மாற்றப்படும். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கினால் கேஸ் சிலிண்டர் விலையை 500 ரூபாயாக ஆக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக நூறுநாள் திட்டம் சரியாக இல்லை. மோடி எப்போது ஆட்சிக்கு வந்தாரா? 100 நாள் வேலை திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார். (கள்ளிப்பால்) விஷம் கொடுப்பது போல் 100 நாள் வேலை திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார் பிரதமர் மோடி. 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்ற வேண்டுமா வேண்டாமா என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். 100 நாள் வேலை திட்டத்தில் காலை மாலை வருகை பதிவுக்கு மேக்கப் போட்டு போட்டோ எடுத்தாலும் உரிய சம்பளம் கிடைப்பதில்லை.? வேலையும் வழங்கப்படுவதில்லை.!

இந்நிலை மாற வேண்டும் என்றால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாகவும்., ஒரு நாள் ஊதியமாக 400 ரூபாயாக கையில் காசு கொடுக்க வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். தேர்தல் முடிந்த பின்பு உதயநிதி வாக்குறுதி அளித்துள்ளார்., ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். மகளிர் உரிமைத் தொகை மாதிரி ராகுல் காந்தி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார் அத்திட்டத்தின் பெயர் மகாலட்சுமி திட்டம். திட்டத்தின் வாயிலாக ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க இருக்கிறார்., அத்திட்டத்தை செயல்படுத்துவதாக கையொப்பமிட்டு உத்திரவாத அட்டை கொடுத்தவர் ராகுல் காந்தி இந்திரா காந்தியின் பேரன் ராஜீவ் காந்தியின் மகன் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எழுதி கையொப்பமிட்டு இருக்கிறார். முன்னேறிய நாடாக இந்தியா மாற வேண்டும் என்றால் நம் குடும்ப நிலை மாற வேண்டும் இந்தியா முன்னேறுவதற்கு அதானி அம்பானி முன்னேறினால் மட்டும் இந்தியா முன்னேறிராது நாமளும் முன்னேற வேண்டும் என்று கூறி கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story