தமிழை நேசிப்பதாக மோடி பொய் சொல்லி வருகிறார் - லியோனி
தேர்தல் பிரசாரம்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கோபுரவாசல் முன்பாக காளையார்கோவில் ஒன்றிய திமுக சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் லியோனி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, வெள்ள தாடிக்காரு மோடி தமிழகத்துக்கு ஐந்து முறை வந்து லேகியம் வித்துட்டு போனார். யாரும் வாங்கல மீண்டும் 9 ஆம் தேதி லேகியம் விற்க வருகிறார்.அவர் எத்தனை முறை வித்தாலும் ஒரு முறை கூட தமிழகத்தில் அவரது லேகியம் எடுபடாது என்றார். தமிழ் மீது தமிழர்கள் மீது மோடி உண்மையான பற்று கொண்டவராக இருந்தால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்றுங்கள்.தமிழ் மொழியை நேசிப்பதாக மோடி பொய் சொல்லி வருகிறார். ஆங்கிலம், மாநில மொழி படித்தாலே போதும். ஹிந்தியை கட்டாயமாக மோடி திணிக்க பார்க்கிறார் என குற்றம் சாட்டினார்.
சமஸ்கிருதம் தெரிந்தால் தான் டாக்டராக முடியும் என்ற சட்டம் இருந்தது அதை எல்லாம் முறியடித்தது பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கலைஞர் தான். அரசுப் பள்ளியில் 12 வது முடித்த பெண்ணுக்கு புதுமைப்பெண் திட்டம் துவங்கி மாதம் 1000 தந்ததால் மூன்று லட்சம் பெண்கள் கல்லூரியில் அதிகம் சேர்ந்திருக்கிறார்கள். கள்ளக் கூட்டணி வைத்து கொண்டு எந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றே தெரியாமல் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி மூஞ்சியில் கரி பூச வேண்டும். மத வெறியை தூண்டிக் கொண்டிருக்கும் பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என பேசினார்