மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்: அமைச்சர் பெரியகருப்பன்

மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்: அமைச்சர் பெரியகருப்பன்

வாக்கு சேகரித்த அமைச்சர்

இந்தியாவில் மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் மேற்கு ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்டபட்ட மங்கலம், கண்டரமாணிக்கம், குன்றக்குடி ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக பட்டமங்கலத்தில் இந்தியா கூட்டணிக் கட்சி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். பின்னர் பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றும் போது, தேர்தலை நாம் சாதாரண தேர்தலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முக்கியமான தேர்தலாக கருத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமான தேர்தலாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு, அது அனைத்து இன மக்களும் பாரபட்சமின்றி வாழக்கூடிய வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய நாடாக விளங்குகிறது.

ஆனால் இன்று அதற்கு ஒரு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் பாரதிய ஜனதா ஆட்சி நடத்தி செயல்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சர்வாதிகார தனமான ஆட்சியை மோடி தலைமையான பாரதிய ஜனதா கட்சி நடத்தி வருகிறது.

மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத ஒரு பிரதமராக மோடி விளங்குகிறார். முன்பு தேர்தலில் நிற்கும் போது ஐந்தாண்டு பிரதமராக எனக்கு வாய்ப்பு தாருங்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இன்று இந்தியா என்ற பெயரை மாற்றத்தான் முயற்சிகள் செய்து வருகிறார் என பேசினார்

Tags

Next Story