மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்: பாரிவேந்தர் பிரச்சாரம்

மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்: பாரிவேந்தர் பிரச்சாரம்

பாரிவேந்தர் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியில் திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு பாரிவேந்தர் பேசியதாவது கடந்த 2019-ம் ஆண்டு நான் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிப்படி 1,200 ஏழை மாணவ,மாணவிகளுக்கு உயர்கல்வி கொடுத்துள்ளேன்.

மீண்டும் நீங்கள் என்னை வெற்றி பெற செய்தால் 1,500 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பேன்.பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சி செய்து வருகிறார். மோடி பிரதமராக வந்த பிறகு தான் இந்தியாவின் மதிப்பு வெளிநாடுகளில் உயர்ந்துள்ளது. தி.மு.க. குடும்ப ஆட்சி நடத்தி வருகிறது.

பிரதமர் நாட்டு மக்க ளுக்காக உழைத்து வருகிறார். எனவே மீண்டும் அவர் பிரதமராக வருவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் இவவாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் கிராமம் கிராமமாக சென்று தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட் டார். பாரிவேந்தருடன் இந்திய ஜனநாயக கட்சி, பா.ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story