மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் வெற்றி பெற முடியாது - உதயநிதி ஸ்டாலின்

மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் வெற்றி பெற முடியாது - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் 

2026 தேர்தல் வரை மோடி தமிழகத்தில் வீடு எடுத்து தங்கி சுற்றினாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது, டெபாசிட் கூட வாங்க முடியாது என ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாடலின் நெரிக்கல்மேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் , தந்தை பெரியார் இடத்திற்கு வந்துள்ளதாகவும் , பெண்கள் கூட்டத்தை பார்த்ததால் ஏற்கனவே வெற்றியை உறுதி செய்துள்ளீர்கள் என்றார்.

திமுகவிற்கு போடும் ஒட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு.மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வேட்டு வைத்துள்ளதாகவும் , சவால் விட்டு சொல்கிறேன் .2026 தேர்தல் வரை மோடி தமிழகத்தில் வீடு எடுத்து தங்கி சுற்றினாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. டெபாசிட் கூட வாங்க முடியாது.திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு என்றும் உலகத்திற்கே வழிகாட்டியாக இருப்பது தான் ஸ்டாலின் காலை உணவுத்திட்டம் என்ற உதயநிதி ஸ்டாலின் , அனைத்து மாநில உரிமைகளையும் அடகு வைத்து விட்டு இப்போது நாடகமாடுகிறார் என்றும் மத்திய அரசை கேட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. என்றார்/

Tags

Next Story