மோடி அடிக்கடி வருவது பெரும் சந்தேகமாக உள்ளது : பீட்டர் அல்போன்ஸ்

மோடி அடிக்கடி வருவது பெரும் சந்தேகமாக உள்ளது : பீட்டர் அல்போன்ஸ்

 இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடல்

"நமது எதிரி நேர்மையான எதிரி அல்ல; தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலே நமக்கு நல்லது" என தமிழக சிறுபான்மையினர்  ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி ஜாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மீராசா தலைமை தாங்கினார். இதில் தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது "சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். எதிரிகளுக்கு களத்தில் பணியாற்ற ஆள் இல்லாததால் படித்த இளைஞர்களை வேலைக்கு வைத்து பல்வேறு பொய்யான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி மோடி வந்து செல்வதே பெரும் சந்தேகமாக உள்ளது. நம் எதிரி நேர்மையான எதிரி அல்ல ஆகையினால் இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலே நல்லது என அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம், மாவட்ட தலைவர் முரளிதரன், ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் சம்சுதீன், துணைத் தலைவர் அப்துல் அழிம், துணைச் செயலாளர் சதக்கத்துல்லா, ஜாமியா பள்ளிவாசல் துணைத் தலைவர் சிராஜுதீன், செயலாளர் எம்எஸ்எப் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் கிதர் பிஸ்மி, காங்கிரஸ் கட்சி மிராசா, சிராஜுதீன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story