மோகனூர் செல்லாண்டியம்மன் ஆலய தேர் திருவிழா!

மோகனூர் அருகே செவ்வந்தாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலய சித்திரை, வைகாசி மாத திருத்தேர் திருவிழாவில் பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் அரசநத்தம் ஊராட்சி செவ்வந்தாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலய சித்திரை, வைகாசி மாத திருத்தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக செவ்வந்தாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலில் கடந்த 8 ந் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா மிக விமரிசையாக துவங்கி, மூலவர் செல்லாண்டி அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் அதிகாலை ரதம் ஏற்றப்பட்டு திருவீதி உலா துவங்கியது பின், செவ்வந்தாம்பாளையம், அரசநத்தம், மல்லம்பாளையம், பனங்காட்டூர், நடுப்பட்டி சந்தரகிரி முடிந்த உடன் சுவாமி எல்லை உடைக்கும் நிகழ்வு நடைபெற்றன அப்போது செல்லாண்டியம்மன் தேர் திருவீதி உலா நடைபெற்றது, பக்தர்கள் அந்தந்த ஊர்களில் தேங்காய் உடைத்து, மாவிளக்கு படைத்து சுவாமி திருத்தேரை சுற்றி செல்லாண்டியம்மனை வணங்கினர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story