மோகனூா் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி இருப்பு செய்தார்

மோகனூா் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை   கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி இருப்பு செய்தார்

மோகனூா் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி இருப்பு செய்தார் 

மோகனூா் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி இருப்பு செய்தார்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தார்.

பிரதம மந்திரி மத்திய சம்படா யோஜனா திட்டம் (PMMSY) 2024-25-ன் கீழ் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்புசெய்தல் திட்டத்தில் அரசு மீன்பண்ணைகளில் (80-100 மி.மீ) உற்பத்தி செய்து ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டத்தின்கீழ் மேட்டூர் அணை, அரசு மீன்பண்ணை வாயிலாக 10.00 இலட்சம் மீன்குஞ்சுகள் வளர்ப்பு செய்து தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் இருப்பு செய்திடுமாறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு காவேரி ஆற்றில் 4.00 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின் மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்து சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் உயிரனங்களின் உயிர்ச்சமநிலையை பாதுகாத்திட முடியும். நாட்டின மீன்வளத்தினைப் பாதுகாத்திட, நாட்டின மீன்களை அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் ஆகிய மீன்குஞ்களின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்துவிடும். இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள், மீன்விரலிகளாக 80 மி.மீ முதல் 100 மி.மீ அளவில் வளர்த்தெடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இன்றையதினம் இருப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 6 மீனவர்களுக்கு ரூ.10.80 இலட்சம் மதிப்பில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உமா கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story