மோகனூர் ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

மோகனூர் ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

மோகனூர் ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில்சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


மோகனூர் ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில்சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பெரமாண்டபாளையம் கிராமம் மோளகவுண்டனூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. காலை சிறப்பு யாக வேள்வி பூர்ணாகதியுடன் நிறைவுற்று பின் பட்டாச்சாரியாகள் புனித கலசத்தை தலையில் சுமந்தவாரு திருக்கோவிலினை சுற்றி வந்து கோவில் மேல் உள்ள ஆலய கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக பெருவிழாவை மிக விமர்சையாக நடத்தினர்.

பின்னர் கோபுர கலசத்திற்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்ட பின்மூலவர் ஸ்ரீ குபேர விநாயகர் புனித திருத்தம் ஊற்றப்பட்டு பின் கோஷ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்தி, விஷ்ணு,துர்க்கைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன. அதையடுத்து, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சுவாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்மி பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தாக்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story