மோகனூர் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டமானது நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம்,மோகனூர் ஒன்றிய கழக செயலாளர் பெ.நவலடி, பேரூர் கழக செயலாளர் செல்லவேல் ஆகியோர் முன்னிலையில் கிளை கழக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story