குடந்தை அருகே ஐ.டி. ஊழியரிடம் ரூ. 10.30 லட்சம் மோசடி

குடந்தை அருகே ஐ.டி. ஊழியரிடம் ரூ. 10.30 லட்சம் மோசடி

பைல் படம்

குடந்தை அருகே ஐ.டி. ஊழியரிடம் ரூ. 10.30 லட்சம் மோசடி நடந்துள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 33 வயது ஐ.டி. நிறுவன ஊழியா் பெங்களூருவில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு ஏப். 12 ஆம் தேதி வந்த தகவலில் இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு என்றும், டாஸ்குகளை நிறைவேற்றி, ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் அதிகத் தொகை வழங்கப்படும் எனவும், இதற்கு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் இருந்தது.

இதை நம்பிய ஐ.டி. நிறுவன ஊழியா் மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 10.30 லட்சம் செலுத்தியும், அவருக்கு எந்தத் தொகையும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story