விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பணம், பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பணம், பொருட்கள் பறிமுதல்

பைல் படம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக, விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.78,04, 740 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் போன்றவை கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்திலுள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், மயிலம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூ ர்ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி காலை வரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறக்கும்படைக் குழுக்கள் ரூ.24,58,540, நிலைக் கண்க ôணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.53,46,200 என மொத்தமாக ரூ.78,04,740 பறிமுதல் செய்யப்பட்டது. இதில்ரூ.20,360 மதிப்பிலான மதுப்புட்டிகளும் அடங்கும்.

Tags

Next Story