கீழக்கரையில் பண மோசடி: புரோக்கர்கள் மீது நடவடிக்கை

கீழக்கரையில் பண மோசடி: புரோக்கர்கள் மீது நடவடிக்கை

தாசில்தார்

பட்டா வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறியதாவது கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் பட்டா மாறுதல், பட்டா புதுப்பித்தல், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற அனைத்து சான்றிதழ்களும் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் மூலம் இணையதளங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழக அரசு உத்தரவின் பேரில் வருடம் தோறும் ஜமபந்தி நடைபெற்று வருகின்றன. அதில் பெறப்படும்மனுக்களுக்கு ஒருமாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் அளிக்கும் சான்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் இலவச பட்டா வழங்குதல், கணினி திருத்தம் போன்ற சேவைகள் மூலம் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது.

இதுகுறித்து புரோக்கர்கள் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு பட்டா எடுத்து தருவதாக கூறி பல பேரிடம் பணம் வாங்கியதாக புகார் வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டா வழக்குகள் சம்பந்தமாக சரியான சான்றிதழ்களை வழங்கி பொதுமக்கள் நேரடியாக தாலுகா அலுவலகத்தை அணுகி பட்டா பெற்றுக் கொள்ளுமாறும் புரோக்கர்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி பணம் பறிக்கும் நோக்கத்தோடு தாலுகா அலுவலகத்திற்குள் புரோக்கர்கள் நுழைந்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story