ஓமலூரில் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த நபரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள தனியார் ஐடெக் நிறுவனத்திற்கு உள்ளே இருக்கும் இரும்பு பொருட்களை வாங்குவதற்காக பாஜக பிரமுகர் கண்ணன் என்பவரிடம் சுமார் ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய இரும்பு பொருட்களை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக 35 லட்சம் ரூபாய் கண்ணனிடம் முன் பணமாக நவ்ஷாத் கொடுத்துள்ளார். வியாபாரம் நடந்து முடிந்த நிலையில் முன் பணமாக கொடுத்த 35லட்சம் ரூபாய் கண்ணன் கொடுக்க தாமத படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் நவ்ஷாத் கொடுத்த புகாரின்பேரில் இரு தரப்பினரையும் அழைத்து பேசிய நிலையில் சூரமங்கலம் காவல் துறை துணை கமிஷனர் முன்னிலையில் பணம் கொடுத்து விடுவதாக கண்ணன் எழுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கண்ணன் நவ்ஷாதிற்கு பேசியபடி பணம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தொழில் செய்வதற்கு வாங்கிய பணத்தை தர மறுக்கும் பாஜக பிரமுகர் கண்ணனுக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.