முசிறியில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது

முசிறியில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவரை முசிறி போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பாலவிடுதி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் காளிதாஸ் (56) இவர் அரசு போக்குவரத்து மணப்பாறை கிளையில் மணப்பாறை சென்னை வழித்தடத்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு முசிறி அந்தரப்பட்டி ராஜாஜி தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ஜெயகாந்தன் (52) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதில், ஜெயகாந்தன் மனைவி பள்ளிக்கல்வித்துறையில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருவதாகவும் தான் நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்ததாக தெரிவித்ததின் பேரில் காளிதாஸ் தனக்கு தெரிந்த செந்தில்குமார் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டி ரூபாய் 6.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றுக் கொண்டவர் வேலை வாங்கித் தர இயலவில்லை என கூறி காளிதாஸிடம் ரூபாய் இரண்டு லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு மீதி ரூ. 4.5 லட்சம் தருவதாக கூறி சென்றவர் நீண்ட நாட்களாக தரவில்லையாம்.

எனவே தான் கொடுத்த பணத்தை முசிறியில் உள்ள ஜெயகாந்தன் வீட்டில் காளிதாஸ் கேட்டபோது தகாத வார்த்தை கூறி, தன்னை மிரட்டியதாகவும், வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார்.

புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து ஜெயகாந்தனை கைது செய்தனர்

Tags

Next Story