உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி பணமாகவோ பொருளாகவோ கொண்டு செல்லக்கூடாது தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இதனை தமிழக முழுவதும் கண்காணிக்க பல்வேறு தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை-வல்லம்பட்டி சாலையில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் இராமநாதபுரம் மாவட்டம், பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(51). இவர் இந்த பகுதியில் ஆடு வியாபாரம் செய்து வருகிறார்.என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சிவசங்குப்பட்டியில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்டதும் விசாரனையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லபட்ட ரூபாய் 1,04500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஒப்படைத்தனர். பின்பு வட்டாட்சியர் முன்னிலையில் பணம் சீல் வைக்கப்பட்டு சாத்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.