உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.24 லட்சம் பறிமுதல்
பணம் பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக பணம், பரிசு பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கீழ்கூத்தப்பாக்கம் பஸ்நிறுத்தம் அருகே நேற்று பறக்கும்படை அதிகாரிகள் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த தனசேகரன் என்பவரிடம் (வயது 32) ரூ.1 லட் சத்து 64 ஆயிரம் இருந்தது. இதுகுறித்த ஆவணங்களை அதிகாரி கள் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வானூர் உதவி தேர்தல் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைத்தனர், அதேபோல் கிளியனூர் அருகே உப்புவேலூர்-நல்லாவூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற திண்டிவனம் பகு தியை சேர்ந்த பிரசாந்த் (28) என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.72 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.