திட்டுப்பாறையில் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்

திட்டுப்பாறையில் பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

காங்கேயம் அருகே திட்டுப்பாறையில் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மதியம் பறக்கும் படை அதிகாரி வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி தலைமையிலான கண்காணிப்பு குழு காங்கேயம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காங்கேயம்- சென்னிமலை சாலையில் திட்டுபாறை அருகே வாகன சோதனையில்,

ஈடுபட்டிருந்த போது ஈரோடு‌ மாவட்டம், சென்னிமலை சேர்ந்த வரதராஜன் என்கிற பிரகாஷ் என்பவர் தனது லோடு ஆட்டோ வாகனத்தில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ. 77 ஆயிரத்து 500 ஐ கொண்டு வந்தது சோதனையில் தெரியவந்தது.

எனவே தேர்தல் நடத்தை விதிகளின்படி தனிநபர் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் ஏதுமின்றி பணம் கொண்டுவருவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பது தெரிவிக்கப்பட்டு‌ அவர் வைத்திருந்த ரொக்கப்‌ பணத்தை கைப்பற்றி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story