உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

X
செங்கம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் கிராமத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்கம் நோக்கி வந்த ராமகிருஷ்ணன் என்பவரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.62,600 ரொக்க தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
