சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது


சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.10¼ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.


சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.10¼ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.

சேலம் கடைவீதியில் பிரசித்திபெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோவிலில் 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் முன்னிலையில் சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டன. இதில் கோவில் ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர். முடிவில் ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கமும், 43 கிராம் தங்கமும், 160 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story