192 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு

192 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு

ஆட்சியர் ஆய்வு 

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்டதேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் ஏப்ரல் 20 ஆம் தேதி வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளி, பெரம்பலூரில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, மேலும் பாதுகாப்பு பணிகளில் 27 எண்ணிக்கையிலான துணை இராணுவ படையினர், 42 எண்ணிக்கையிலான தமிழக சிறப்பு காவல் படையினர், 60 எண்ணிக்கையிலான ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 165 எண்ணிக்கையிலான சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் என மொத்தம் 294 நபர்கள் பாதுகாப்பு பணிகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்ள உள்ளனர்.

வேட்பாளர்களின் முகவர்கள் சி.சி.டி.வி காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வாக்கு எண்ணும் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் , மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர்கள் சிவா, பாரதிவளவன், அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story