சத்தியமங்கலம் அருகே குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி

சத்தியமங்கலம் அருகே குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி

குரங்குகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் அருகே குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியில் குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி சத்தி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகள் வீட்டுக்குள் நுழைந்து சர்வ நாசம் செய்து வருவதால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு சத்தி நகர் பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குரங்குகள் கடம்பூர், பண்ணாரி, பவானிசாகர் பகுதியில் ரோட்டோரமாக சுற்றி வருவது வழக்கம். இவைகள் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மூலம் இந்த பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. குப்பை தொட்டியில் போடப்படும் உணவு பொருட்களை மட்டும் குரங்குகள் சாப்பிட்டு வந்தன. ஆனால் தற்போது உணவுக்காக குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. பல சமயங்களில் வீட்டில் ஆட்கள் இருக்கும் நேரமே உள்ளே புகுந்து வீட்டை நாசப்படுத்தி செல்கின்றன. அதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் புகும் குரங்குகள் சமைத்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதுடன் வீட்டில் உள்ள துணிகள் மற்றும் செல்போன் உட்பட அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்று எங்காவது போட்டு விடுகின்றன. மேலும் வீட்டு மாடியில் காய போடும் உணவு தானியங்களை தூக்கி சென்று விடுகின்றன. அதுமட்டுமின்றி சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களையும் பிரிந்து செல்கின்றன. அதனால் சிறுவர்கள் மற்றும் வீட்டுக்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் வெகுநாட்களாக அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். சத்தி நகர் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளை கூண்டு பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story