பருவ மழை : மின்வாரிய ஊழியர்கள் கிராமங்களில் விழிப்புணர்வு
திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் மழைக்காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு வழிகாட்டுதலின்படி உதவி செயற்பொறியாளர் எழிலரசி, உதவி பொறியாளர்கள் கருணாகரன், ராஜேந்திரன் தனலட்சுமி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தேவிகாபுரத்தில் கிராமம் கிராமமாக சென்று மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், மின்சார ஒயர்கள் சாலையில் அறுந்து விழுந்து கிடந்தால் அதனை தொடவோ, மிதிக்கவோ வேண்டாம்,வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்களைபாதுகாப்பாக பயன்படுத்தவும், சாலையில் உள்ள மின் கம்பங்களிலும் பாதுகாப்பு கம்பிகளிலும் ஆடு மாடுகளை கட்ட வேண்டாம், மின் துண்டிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள், தாங்களாகவே சென்று மின்மாற்றியை இயக்க வேண்டாம், உங்கள் உடமைகளுக்கும் உயிருக்கும்பாதுகாப்பாக செயல்படுங்கள் என துண்டு பிரசுரங்களை வழங்கினர். பஜார் வீதி, பஸ் நிலையம்,தேவிகாபுரம்,தச்சம்பாடி ஊத்தூர், ஆத்துரை, மலையான்புரடை,தும்பூர் ஓதலவாடி பத்யாவரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story