விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்


விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்துவகை பள்ளிகளில் செயல்பட்டு வரும் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களான டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, கண்நோய், மலேரியா ஆகிய நோய்கள் எவ்வாறு பரவுகிறது,

அதற்கான அறிகுறிகள், அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்ற விரிவான தகவல்கள் அடங்கிய பிரசுரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வெளியிட்டு தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், வட்டார கல்வி அலுவலர்களின் முன்னிலையில் வழங்கப்படும். இந்த பிரசுரங்களை இளம் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு செல்வதுரை, பொருளாளர் எட்வர்ட் தங்கராஜ், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், தமிழழகன், மாவட்ட நிர்வாகிகள் எட்வின், சின்னப்பராஜ், ஹசீனா, ஹரிபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story