பருவமழை எதிரொலி - மேலப்பாளையத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்
நெல்லை மாநகர பாளை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டி (MMS) இணைந்து கடந்த மூன்று நாட்களாக மேலப்பாளையத்தின் பிரதான பகுதிகளில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை கருத்தில் கொண்டு மேலப்பாளையத்தில் உள்ள பிரதான பகுதிகளான உழவர் சந்தை, பஜார் திடல், கொட்டிக்குளம் பஜார், வாவர் பள்ளி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மேலப்பாளையத்தில் உள்ள முக்கிய தெருக்களிலும் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் விநியோகம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டியின் தலைவர் முஹம்மது அலி ஜவஹர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை விநியோகம் செய்து ஆரம்பித்து வைத்தார்.முகாமில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலன் அடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மேலப்பாளையம் மெடிக்கல் சொசைட்டி (MMS) சிறப்பாக செய்திருந்தது.