பருவமழை - மின்தடை குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மின் தடை குறித்த புகார் தெரிவிப்பதற்காகன தொலைபேசி எண்களை திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையின் போது மின் விபத்துகள் ஏற்படாத வகையிலும், மற்றும் மின் வேலிகள் அமைப்பதினால் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு மின்வாரிய அலுவலகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற வீடு, விவசாயம் மற்றும் இதர மின் இணைப்புகளில் இருந்து மின்சார வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன் படி குற்றமாகும். மேலும் குற்றவியல் தண்டனையும் வழங்கப்படும். எனவே விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க கூடாது. இடி, மின்னல்களின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், செல்போன் மற்றும் தொலை பேசியை பயன்டுத்தக் கூடாது. இடி, மின்னலின் போது வெட்டவெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் அடைய கூடாது. மின்பாதைகளுக்கு கீழும், அருகிலும் நீளமான உலோக கம்பிகள், ஈரமான மர கொம்புகளை எடுத்துச் செல்லக்கூ டாது. ஈரமான கைகளால் மின்சார சாதனங்களை தொடக்கூடாது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் குறித்த புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 ,GT GOT M தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.