பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

ஆணையர் ஆய்வு 

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சற்று கனமழை பெய்தால் பறக்கின் கால் கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து விடுவது வழக்கம். அதிலும் தற்போது வயல்களாக இருந்து வீட்டு மனைகளாக மாறிய மீனாட்சி கார்டன் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி வருகிறது. தற்போது வரும் 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி நேற்று எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர் நகர அலுவலர் ராம்குமார் மற்றும் சுகாதாரத் துறை, பொறியியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மழை நீர் தேங்காமல் அங்கு உடனடியாக உடனடியாக தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

Tags

Next Story