பருவமழை மீட்பு பணிக்கு அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும்

பருவமழை மீட்பு பணிக்கு அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும்

தென்மேற்கு பருவ மழை மீட்பு பணிக்கு, தன்னார்வலர்கள், பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.


தென்மேற்கு பருவ மழை மீட்பு பணிக்கு, தன்னார்வலர்கள், பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.

தென்மேற்கு பருவ மழை மீட்பு பணிக்கு, தன்னார்வலர்கள், பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கலெக்டர் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார். காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், தென் மேற்கு பருவ மழை பாதிப்பு தடுப்பு குறித்து, பலதுறை அதிகாரிகளின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள்,, 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு, மொத்தம் 72 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, கண்டறியப்பட்டு உள்ளன.

இதுபோன்ற இடங்களில், 11 துறையைச் சேர்ந்த அலுவலர்களை, 21 மண்டல குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை கலெக்டர் நிலையிலான குழுத் தலைவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்வாய்கள், பாலங்கள் ஆகியவற்றை துார்வாரும் பணி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகள். பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தல், நீர்வரத்து கால்வாய்கள் ஆகீயவற்றை துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும், வெள்ள தடுப்பு மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தண்ணீர் வெளியேற்றும் கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அரசு துறை அலுவலர்களுடன், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story